முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு : 100-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கும் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு : 100-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கும் போராட்டம்!

மொட்டை அடித்து போராட்டம்

மொட்டை அடித்து போராட்டம்

Parandur Airport Protest | வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, 13 கிராம மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிராக ஏகனாபுரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது எதிர்ப்பு வெளிப்படுத்தினர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர், ஏகனாபுரம், அங்கம்மாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடங்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், புதிய விமான நிலையத்திற்கான நிலங்களை கையகப்படுத்தினால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, 13 கிராம மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

top videos

    இந்த போராட்டம் 264-வது நாளை எட்டிய நிலையில் ஏகனாபுரத்தில் ஒன்றுதிரண்ட 100-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன், கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியும் நாமமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Kancheepuram