முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்!

காஞ்சியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்!

X
கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள் வழிபாடு

Kanchipuram News | குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் தென்னை மர குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஒசானா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தென்னை மர குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஒசானா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்களை கிறிஸ்தவ மக்கள் நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

புனித சூசையப்பர் தேவாலய பாதிரியார் அருள்பணி சூசைராஜ் தலைமையில் ஒன்று கூடிய ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் தென்னை மர குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி, ஓசானா பாடல்களை பாடியபடி தேவாலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். பின்னர் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து வணங்கி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News