முகப்பு /காஞ்சிபுரம் /

கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்

கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்

X
காஞ்சி

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்

Kanchi Varadharaja Perumal Temple | கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் பல்லவ உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் பல்லவ உற்சவம் வரும் சனிக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

பல்லவ உற்சவத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு அனந்த சரஸ் திருக்குளம் அருகே உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடத்தப்பட்டு குங்குமப்பூ, சந்தனம், பன்னீர், உள்ளிட்டவைகள் தடவப்பட்டு மல்லிகை, கதம்ப பூ மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாதஸ்வர இசை ஒலிக்க நீல நிறத்திலான திரைகளை விளக்கி, பஞ்சாங்கம் வாசிக்க, கூடிநின்ற பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறிய அளவிலான பிரண தாதி ஹர வரதர் பூப்பல்லத்தில் வலம் வந்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருள, ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளித்த வரதராஜ பெருமாள், சன்னதி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையும் படிங்க : கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்... 53 வருட திருமண வாழ்க்கை... சாவிலும் இணைபிரியாத தம்பதி...!

வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த பல்லவ உற்சவத்தின் முதல் நாளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News