முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்.. சேனை முதன்மையாருக்கு சிறப்பு பூஜை..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்.. சேனை முதன்மையாருக்கு சிறப்பு பூஜை..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவம்

Kanchipuram News | வசந்த காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்குவதை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பல்லவ உற்சவ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உற்சவ சிறப்பு பூஜைகள் வெகுசிறப்பாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படுகிறது காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்ழும் இந்த கோவில், தேவராஜ சுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே, கோடை காலம் தொடங்குவதை ஒட்டி பல்லவ உற்சவம் அங்குரார் பணம் நடைபெற்றது.

வசந்த காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்குவதை ஒட்டி நடைபெறும் இந்த பல்லவ உற்சவத்திற்காக, அத்திகிரி மலை மீது உள்ள வரதராஜ பெருமாளின் ஆசியைப் பெற்ற சேனை முதன்மையார் கோவில் வளாகத்தில் மேள தாளங்கள் முழங்க வலம் வந்து நம்மாழ்வார் சன்னதியில் எழுந்தருளினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நம்மாழ்வார் சான்னதியில் எழுந்தருளிய சேனை முதன்மையார் முன்னிலையில், வசந்த காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் மாந்தளிர், அரச இலை தளிர் உள்ளிட்டவைகளுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் செய்து சேனை முதன்மையாருக் தூப, தீப, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்குரார் பணம் செய்து பல்லவ உற்சவத்தினை கோவில் பட்டாசாரியார்கள் துவங்கி வைத்தனர். இந்த உற்சவத்தை காண, திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News