முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

X
விவசாய

விவசாய கருத்தரங்கு

Kanchipuram | காஞ்சிபுரம் அருகே வேளியூரில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே வேளியூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வேளியூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை முறை, செம்மை நெல் சாகுபடி, பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை, வேம்புக் கரைசல், மருத்துவப் பயன்பாடுகள்,  காட்டுப்பன்றிகளை வேளாண் கருவிகள் மூலமாக விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்கும் முறைகள், இயற்கை வேளாண்மை ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

முன்னோடி விவசாயி எழிலன் கலந்து கொண்டு பாரம்பரிய அரிசி மற்றும் மூலிகை செடிகள் சாகுபடி யுக்திகள் குறித்து விளக்கி பேசினார். இக்கருத்தரங்கில் வேளாண் கல்லூரி மாணவியர்கள் ”கிராம தங்கல்” திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் தங்கியிருந்து விவசாயிகளின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.மேலும் வேளாண் கல்லூரி மாணவியர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு விவாசய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

விவசாயத்தைப் பாதுகாக்க... காஞ்சிபுரத்தை வலம் வந்த டிராக்டர் பேரணி

இக்கருத்தரங்கிற்கு வேளாண்மை அலுவலர்கள் மு.பிரீத்தி, எஸ்.ஜமுனாராணி, வேளாண் கல்லூரி முதல்வர் கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஜெயராமன் வரவேற்றார். கருத்தரங்கில் வேளாண் கல்லூரியை சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் கார்த்திக்,பேராசிரியை புவிலா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News