முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் : மயங்கி விழுந்த நபருக்கு சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றிய செவிலியர்..

காஞ்சிபுரம் : மயங்கி விழுந்த நபருக்கு சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றிய செவிலியர்..

முதியவரை காப்பாற்றிய செவிலியர்

முதியவரை காப்பாற்றிய செவிலியர்

Kanchipuram News : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து அபாயகரமான கட்டத்துக்கு சென்ற ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய அரசு செவிலியருக்கு குவியும் பாராட்டுக்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருபவர் விஜய நிர்மலா. இவர் கடந்த வாரம் பணிமுடித்துவிட்டு தன்னுடைய சொந்த ஊரான கம்மார்பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். இவர் நின்று இருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரம் தள்ளி திடீரென ராஜேந்திரன் என்ற முதியவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்த முதியவரை சுற்றி ஏராளமான மக்கள் கூடி நின்று என்ன செய்வது என தெரியாமல் விழித்தனர்.

இதைக் கண்ட செவிலியர் விஜய நிர்மலா சற்றும் தாமதிக்காமல், நாடி துடிப்புகள் குறைவாகி பேச்சு மூச்சு இன்றி அபாய கட்டத்தில் இருந்த முதியவருக்கு ,எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி சிபிஆர் (இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை) முறையில் முதல் உதவி சிகிச்சையை செய்திருக்கிறார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அந்த முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. அங்கு கூடியிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களையும், பயணிகளும் அந்த முதியவர் இறந்து விட்டார் என்றே கருதிய நிலையில் அவருக்கு நினைவு திரும்பி வந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றனர்.

அது மட்டுமல்லாமல் 108 வாகனத்தை வரவழைத்து அதில் அந்த முதியவரை ஏற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள சீனியர் மருத்துவர்களுக்கும் விஜய நிர்மலா தகவல் அளித்தார். தன்னுடைய பணி முடித்து விட்டுவீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த அரசு செவிலியர் ஒருவர், கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை, எந்த விதமான மருத்துவ உபகரணங்களின்றி சிபிஆர் என்னும் சுவாசமும் நாடித் துடிப்பும் திரும்ப பெறுதல் முறையில் சிகிச்சை அளித்து அந்த முதியவரின் உயிரை மீட்டு தந்த அரசு செவிலியர் விஜய நிர்மலாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிக்கிறது.

First published:

Tags: Kanchipuram, Local News