முகப்பு /காஞ்சிபுரம் /

ஒடிசா மாநில ரயில் விபத்து..! ஆன்மா சாந்தி அடைய காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்..!

ஒடிசா மாநில ரயில் விபத்து..! ஆன்மா சாந்தி அடைய காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்..!

X
காஞ்சி

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்

Kanchi Kamachi Amman Temple : ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு காயமடைந்தவர்களும் விரைந்து குணமடைய வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது இரு பயணிகள் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டு 275 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள்சிகிச்சை முடிந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இந்த கோரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெகத்குரு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி அவர்களின் வேண்டுகோளின்படி ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

First published:

Tags: Kanchipuram, Local News, Religion18