ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் காவு வாங்கும் பாழடைந்த கிணறு- சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கைவிடுத்த நாம் தமிழர்

காஞ்சிபுரத்தில் காவு வாங்கும் பாழடைந்த கிணறு- சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கைவிடுத்த நாம் தமிழர்

பாழடைந்த கிணறு

பாழடைந்த கிணறு

Kanchipuram | உத்திரமேரூர் அருகே சிறுமையிலூரில் உள்ள பாழடைந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே சிறுமையிலூரில் உள்ள பாழடைந்த கிணற்றில் அடிக்கடி உயிர்ப்பலிகள் ஏற்படுவதால் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் ச.வெங்கடேசன் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில், ‘உத்திரமேரூர் அருகே சிறுமையிலூரில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. பயன்பாடு இல்லாமல் உள்ள இக்கிணறானது சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி இக்கிணற்றில் கால்நடைகள், கோழிகள் உயிரிழந்து இறந்து விடுகின்றன.

இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.எ னவே உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்கவும், கிணற்றை தூர் வார்த்து தந்திடுமாறும் அக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

காஞ்சியில் இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியர்

ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News