முகப்பு /காஞ்சிபுரம் /

இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!

இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!

X
இனி

இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்

Buses And Lorries Will Run on Natural Gas : பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் காஞ்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் பேருந்து மற்றும் லாரிகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ள நிலையில் இயற்கை எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயுவை பொருத்தவரை முதல்கட்டமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோக்களுக்கு பொருத்தப்பட்டு அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை விட இயற்கை எரிவாயு விலை சற்று குறைவு. அதுமட்டும் அல்லாமல் மைலேஜும் அதிகம் கிடைக்கும். எனவே சிறிய ரக வாகனங்களில் இயற்கை எரிவாயுக்கான டேங் பொருத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் தொடங்கப்பட்டுள்ள ஏஜி அண்ட் பி பிரதம் (AG&P PRATHAM) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தற்போது பேருந்து, லாரி, டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.

இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்

ஒரு சிறிய தொகை செலவிடுவதன் மூலம் கனரக வாகங்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்க வைக்க முடியும் என்கிறது இந்த நிறுவனம். அதன்படி இந்திய மோட்டார்வாகன சட்டத்தின் கீழ் பலக்கட்ட சோதனைக்கு பின் இதற்கான கருவிகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இது 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்கும்போது வழக்கமான எரிப்பொருள் செலவைவிட 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசைவிட, இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களில் காற்று மாசு மிகவும் குறைவு.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும், மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களே விற்பனைக்கு வரும் என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே டீசலில் இயங்கும் கனரக வாகனங்கள் இயற்கை எரிவாயுவிற்கு மாற்றிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News