முகப்பு /காஞ்சிபுரம் /

ஹோட்டல்களில் தரமற்ற உணவு விற்கப்படுகிறதா? - உடனே இந்த இணையதளத்தில் புகாரளிக்கலாம்.!

ஹோட்டல்களில் தரமற்ற உணவு விற்கப்படுகிறதா? - உடனே இந்த இணையதளத்தில் புகாரளிக்கலாம்.!

மாதிரி படம்

மாதிரி படம்

Food Complaints : காஞ்சிபுரத்தில் தரமற்ற உணவு புகார்களுக்கு புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்க இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான முறையில் உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொழிற்சாலை..! ஈரோட்டில் இப்படி ஒரு சங்ககால நகரமா..?

இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tn Food Safety Consumer App பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலமும், கைப்பேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம். மேலும் புகார்தாரரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kanchipuram, Local News