முகப்பு /காஞ்சிபுரம் /

செய்யாற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு.. பூமி பூஜையுடன் தொடக்கம்..

செய்யாற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு.. பூமி பூஜையுடன் தொடக்கம்..

X
செய்யாற்றில்

செய்யாற்றில் புதிய தடுப்பணை

New Dam Construction Across Cheyyar River in Kanchipuram : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படுகிறது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகளின் இடையே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே ஏழு தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையசீவரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதேபோல் மாகறல் கிராமப் பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே ஓர் தடுப்பணை கட்டப்பட்டது. அந்த பகுதிகளின் ஆற்றுப்படுகையில் மழை நீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயன் பெற்றனர்.

புதிய தடுப்பணைக்கான பூமி பூஜை

இதையடுத்து தற்போது, உத்திரமேரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 35 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டும் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பொதுப்பணி துறையின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதிய அணையைக் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த சிலாம்பாக்கம் அணைக்கட்டின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகறல் ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம், அரசாணைபாலை, மயிலாத்தூர், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,623 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News