முகப்பு /காஞ்சிபுரம் /

வாலாஜாபாத் ஒன்றியத்தில் குப்பை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள்..

வாலாஜாபாத் ஒன்றியத்தில் குப்பை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள்..

X
புதிய

புதிய பேட்டரி வாகனங்கள்

Kanchipuram News | காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் ₹24 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேகரிக்க புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பைகளை 3 சக்கர சைக்கிள்களில் நாள்தோறும் சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சில நேரங்களில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அதிகளவில் சேர்ந்து 3 சக்கர சைக்கிள்களில் தூய்மை காவலர்கள் எடுத்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழல் ஏற்பட்டபோது, பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

பேட்டரியில் இயங்கும் புதிய வாகனங்கள் ஒப்படைப்பு

அதன்படி வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் தற்போது முதல் கட்டமாக 8 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 3 சக்கர பேட்டரி வாகனங்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராமப்புற தூய்மை காவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News