முகப்பு /காஞ்சிபுரம் /

'நம்ம ஊரு சூப்பர்' திட்டம் - குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காஞ்சிபுரம் கலெக்டர்!

'நம்ம ஊரு சூப்பர்' திட்டம் - குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காஞ்சிபுரம் கலெக்டர்!

X
ஏனாத்தூர்

ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுரைகளை வழங்கினார்.

ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுரைகளை வழங்கினார்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

திடக்கழிவு மேலாண்மை குறித்து ஏனாத்தூரில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தூய்மை பணியாளர்கள் , கல்லூரி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து கிராம வீதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குப்பைகளை சேகரித்து அகற்றினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நம்ம ஊரு சூப்பர் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் ஊராட்சியில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போட்டு வைக்கும் கிராம மக்களிடையே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு கிராம மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து உறுதிமொழி எடுத்து வைத்து, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்து கிராம மக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கினார்.

பின்னர் கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், ஆகியோருடன் இணைந்து கிராமப்புற வீதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில், பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று துண்டு பிரசுரங்களை கொடுத்து, அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன்,

top videos

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, முத்து சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News