முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி.. கோப்பை, ரொக்கப் பணத்தை பரிசாக பெற்ற வீரர்கள்..

காஞ்சிபுரத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி.. கோப்பை, ரொக்கப் பணத்தை பரிசாக பெற்ற வீரர்கள்..

X
வெற்றி

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Mega volley ball tournament at ullavoor Village |காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் உள்ளாவூர் கிராமத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில், சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்களாக கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணங்களை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கைப்பந்துப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் தங்கள் அணியினருடன் கலந்து கொண்டு களமிறங்கினர். இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் ஒன்றிய குழு துணைத்தலைவர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், வாலாஜாபாத் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்து விளையாட்டை கண்டு ரசித்தனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News, Sports