முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

காஞ்சிபுரத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

X
காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

Meendum Manjapai Awareness Marathon At Kanchipuram |தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் எனும் நெகிழி பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில் பொதுமக்கள் கையில் மீண்டும் துணியாலான மஞ்சள் பைகளை பயன் படுத்த வலியுறுத்தி பல்வேறு விதமான விழிப்புணர்வு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பொதுமக்கள் மஞ்சள் பைகளை பயன்படுத்த செய்யும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையிலும், இளைய சமுதாயமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கு.பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மஞ்சப் பை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும், பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும் மாவட்ட விளையாட்டு அரங்கு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News