முகப்பு /காஞ்சிபுரம் /

உள்ளாவூர் கிராமத்தில் மூலிகைச் செடிகள் நாற்றங்கால் பண்ணை.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்..

உள்ளாவூர் கிராமத்தில் மூலிகைச் செடிகள் நாற்றங்கால் பண்ணை.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்..

உள்ளாவூர் கிராமத்தில் மூலிகைச் செடிகள் நாற்றங்கால் பண்ணை

உள்ளாவூர் கிராமத்தில் மூலிகைச் செடிகள் நாற்றங்கால் பண்ணை

Medicinal Herbs Farm At Kanchipuram : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தின் மூலம் ரூ.8,13,000 மதிப்பில்  மூலிகைச் செடி நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உள்ளாவூர் ஊராட்சியில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பங்களை சேர்ந்த 12 மகளிரை உறுப்பினர்களாக சேர்த்து உள்ளாவூர் பழங்குடியினர் மூலிகை பண்ணை வளர்ப்பு தொழிற்குழு உருவாக்கப்பட்டு, 75 ஆயிரம் ரூபாய் நிதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வழங்கப்பட்டது.

பின்னர் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து இக்குழுவின் தொழில் வளர்ச்சிக்காக விரிவான தொழில் திட்டம் தயார் செய்து, அரசின் ஒப்புதலுடன் 7 லட்சத்து 38, ஆயிரம் ரூபாய் நிதி பெறப்பட்டு உள்ளாவூர் ஊராட்சியின் மூலம் 1 ஏக்கர் 23 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த இடத்தில் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் மேம்பட அமைக்கப்பட்ட மூலிகை நாற்றங்கால் பண்ணையினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உள்ளாவூர் ஊராட்சியில் துவக்கி வைத்தார். பழங்குடியின உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பேசிய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி,

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது, உலக வங்கி நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது.

உள்ளாவூர் கிராமத்தில் மூலிகைச் செடிகள் நாற்றங்கால் பண்ணை

இதையும் படிங்க : பரமக்குடியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் திடீர் சாலை மறியல்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு..

இத்திட்டம் வறுமை ஒழிப்பு என்னும் செயல்பாட்டையும் தாண்டி ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு,நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தின் வளம் மற்றும் நிலையான உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மை செயல்பாடான தொழில் மேம்பாட்டில் உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, பொருட்களின் தரத்தை மேம்படுத்தி விற்பனைச் செய்வதன் மூலம் உறுப்பினர்களின் வருமானத்தைப் பெருக்குவது தொழிற்குழுவின் நோக்கமாகும் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நல அலுவலர் பிரகாஷ் வேல், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், வாலாஜாபாத் தாசில்தார் சிவப்பிரியா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் முனுசாமி,திட்ட செயல் அலுவலர்கள், வட்டார அணித் தலைவர் மற்றும் தொழிற்குழு உறுப்பினர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News