அய்யம்பேட்டை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
"வாழ்ந்து காட்டுவோம் திட்டம்" மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்கள். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து ஸ்ரீ-காஞ்சி எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News