முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி பீமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா..

காஞ்சி பீமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா..

X
காஞ்சி

காஞ்சி பீமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Kanchipuram Beemeshwarar Temple | காஞ்சிபுரம் விஷார் கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் ஆலயத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், விஷார் கிராமத்தில் அமைந்துள்ளது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீமன் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமான ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சிவபெருமான் 16 செல்வங்களை அருளும் வகையில் பதினாறு பட்டைகளுடன் தாமரைப் பூவில் அமர்ந்து காட்சியளிக்கிறார். இவ்வாலயத்திற்கு வந்து பீமேஸ்வரரை வழிபட்டு சென்றால் அவர்களுக்கு தங்களது வாழ்வில் கிடைக்கக்கூடிய 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல் நோயற்ற வாழ்வும், திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடல்,குழந்தை பேறு உள்ளிட்ட அனைத்து செல்வங்களும் கைகூடும் என்பதினால் இக்கோவிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை வேண்டி விரும்பி இறைவனிடம் பிரார்த்தனை செய்து பீமேஸ்வரரை வழிபட்டு சென்று வருகின்றனர். மேலும் மகா சிவராத்திரி அன்று இவ்வாலயத்திற்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது மேலும் சிறப்பு என்பதினால் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று விஷார் கிராம மக்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள பொதுமக்களும் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்து சிவபெருமானை வழிபட்டு சிவபெருமானின் பேரருள் பெற்று செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இவ்வாலயத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி பீமேஸ்வரருக்கு நான்கு கால பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வந்திருந்து தங்களது வேண்டுதல் நிறைவேற பீமேஸ்வரரை வழிபட்டு வணங்கி சென்றனர். மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Kancheepuram, Local News, Maha Shivaratri