முறைகேட்டில் ஈடுபடும் கனிமவளத்துறை இணை ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 எம்சாண்ட் அரவை நிலையங்களுக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் 176 எம் சாண்ட் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதன் மூலம் தரமற்ற எம் சாண்ட் தயாரிப்பதாகவும் அதிக பாரம் ஏற்றி மணல் லாரி உரிமையாளர்கள் மூலம் கனிம வளம் கடத்தலில் அரவை நிலைய உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இவர்களை தடுத்திட வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் கனிமவளத்துறை இணை ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கனிமவளத்துறையை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சங்கத்தின் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் யுவராஜ், ”மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறுதியாக கனிமவளத்துறை இணை இயக்குனரை மாற்ற வேண்டும் என கூறியிருக்கிறோம், கனிமவளத்துறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும், தொடர்ந்து இந்த கனிமங்கள் கொள்ளை, மலைகள் உடைப்பதிலே முறைகேடு, அதே போல அதிக பாரம் ஏற்றி விடுவதால் கனிம கடத்தலுக்கு லாரி உரிமையாளர்களை பயன்படுத்தி கனிம கடத்தலில் ஈடுபடுகிறார்கள், இதைத் தொடர்ந்து சொல்லி வருகிறோம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகப்பெரிய முறைகேடும் ஊழலும் லஞ்சமும் இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது என்பதை ஆட்சியரின் நேரடி பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
ஒரு வாரத்திற்கு உள்ளாக மனு மீது நடவடிக்கை எடுத்து இணை இயக்குனரை மாற்றவில்லை என்றால் தொடர்ந்து நாங்கள் இங்கே பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆகவே தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இதில் தலையிட வேண்டும், தொடர்ந்து முதல்வரிடமும் ஒன்றரை ஆண்டுகளாக கூறி வருகிறோம். இல்லையென்றால் நாங்கள் கவர்னரிடம் செல்லவும் தயங்க மாட்டோம்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News