காஞ்சிபுரம் பக்தர்கள் சார்பில் பருவதமலை அடிவாரத்தில் வைக்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் சிவ லிங்கம் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கடலாடி, தென் மகாதேவ மங்கலம், ஆகிய இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 5,500 ஏக்கர் பரப்பளவில் பருவதமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ மல்லிகார்ஜூனர் உடனுறை பிரமராம்பிகை கோவில் இருக்கிறது. இங்கு உள்ள சிவனை தரிசிப்பதற்கும் கிரிவலம் வருவதற்கும் ஏராளமான பக்தர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் பருவதமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பருவத மலைக்குச் செல்லும் காஞ்சிபுரம் பக்தர்கள் ஒன்றிணைந்து, நித்திய அன்னதான சத்திரம் டிரஸ்ட் மூலம் பருவத மலையின் அடிவாரத்தில் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்க கடந்த 10 நாட்களாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான இந்த சிவலிங்கம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளம் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தது. இவ்வாறு உலா வந்த ருத்ராட்ச லிங்கத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் பருவதமலைக்குச் செல்லும் வழிநெடிகிலும் உள்ள பகுதிகளில், பக்தர்கள் தரிசித்து வணங்கும் வகையில் ருத்ராட்ச சிவலிங்கம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர், பர்வதமலை கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News