முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்... 121 வழக்குகள் சமரசம்... தீர்வுத் தொகையாக ரூ.4.71 கோடி..!

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்... 121 வழக்குகள் சமரசம்... தீர்வுத் தொகையாக ரூ.4.71 கோடி..!

X
விபத்தில்

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கும் நீதிபதி

kancheepuram District | காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்துக்களுக்கென நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 121 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்துக்களுக்கென நடந்த லோக் அதாலத் எனப்படும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 121 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.4.71 கோடி வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மோட்டார் வாகன விபத்துக்களை சமரசம் செய்து வைப்பதற்காக மட்டும் சிறப்பு நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூ.18 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு சட்டப்பணிகள் குழுவின் தலைவர் பி.திருஞானசம்பந்தம், நீதிபதி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், வழக்குரைஞர் ஜான், துரைமுருகன், பத்மனாபன், வடிவேல், மணிமாறன் மற்றும் வழக்குரைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். .இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.

First published:

Tags: Kancheepuram, Local News