காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பி.சிவஞானம் தலைமையில் கூடியது. நீதிபதிகள் பி.திருஞானசம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் தீர்வுத்தொகையாக வழக்காடிகளுக்கு ரூ.9,42,98,234 வழங்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களான திருவள்ளூரை சேர்ந்த கிரிதரன்(39) குடும்பத்தினரிடம் இழப்பீட்டு தொகையாக ரூ.73 லட்சத்துக்கான காசோலையும், அனுமன் தண்டலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன்(44) குடும்பத்தினரிடம் ரூ.47.74 லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட நீதிபதி(பொறுப்பு)பி.சிவஞானம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது விரைவு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், பாலமுருகன் ஆகியோர் உட்பட வழக்குரைஞர்கள் பலரும் உடன் இருந்தனர். முன்னதாக மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில் வழக்காடிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News