முகப்பு /காஞ்சிபுரம் /

டாப்செட்கோ கடன் உதவி திட்டம்.. காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

டாப்செட்கோ கடன் உதவி திட்டம்.. காஞ்சிபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Loan schemes : டாப்செட்கோ (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்) கடன் உதவி திட்டம் 2023-24 குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாப்செட்கோ கடன் உதவி திட்டம் தொடர்பாக கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

“தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கு 2023-24 நிதி ஆண்டிற்கு ரூ.200 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான பொது கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% லிருந்து 8% வரை. பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5% ஆகும்.

சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4%, மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : கார்த்தி படத்தில் பேஃமஸான கடை.. மதுரையில் 150 வருடங்கள் பழமையான மாலை கோனார் சந்தன கடை.. 

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5% ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும்.

மேற்படி டாப்செட்கோ கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எனவே, மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்பும் இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் அணுகி, விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கடன் உதவி பெற்று பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Kancheepuram, Local News