முகப்பு /காஞ்சிபுரம் /

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு.. காஞ்சியில் நடைபெற்ற பேரணி!

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு.. காஞ்சியில் நடைபெற்ற பேரணி!

X
பேரணியை

பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் தொழுநோய் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கனவை நினைவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தொழுநோய் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சுகாதாரத்துறை அலுவலர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு உறுதிமொழி வாசித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வு செய்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Rally