முகப்பு /காஞ்சிபுரம் /

பாலுசெட்டி சத்திரத்தில் கிராம பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!

பாலுசெட்டி சத்திரத்தில் கிராம பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!

X
சட்டங்கள்

சட்டங்கள் குறித்து பெண்களிடம் எடுத்துரைக்கும் நீதிபதி கயல்விழி 

Kanchipuram | காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே திருப்புட்குழி கிராம மக்களிடையே சார்பு நீதிபதி கயல்விழி தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம்,பாலுசெட்டி சத்திரம் அருகே திருப்புட்குழி கிராம மக்களிடையே சார்பு நீதிபதி கயல்விழி தலைமையில் கிராம பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மகளிர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், திருமணம் மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் ஆகிய மூன்று தலைப்புகளில், கருத்தரங்கம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பள்ளி,கல்லூரிகளிலும், பணியிடத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு தீர்வு காண வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளை நீதிபதி வழங்கினர்.

அதிகளவில் பணியிடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமையில் பாதிப்புக்குள்ளவது இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்து நீதிபதி கயல்விழி கிராமப் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் திருப்புட்குழி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவேந்திரன், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் குறித்து பேச வழக்கறிஞர்.ரமேஷ்,திருமண மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் விழிப்புணர்வுகாக வழக்கறிஞர்.கார்த்திகேயன் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kancheepuram, Local News