முகப்பு /காஞ்சிபுரம் /

குன்றத்தூர் அருகே அரசுப்பள்ளிக்கு கழிவறை, பூங்கா அமைத்துக்கொடுத்த தனியார் நிறுவனம்..!

குன்றத்தூர் அருகே அரசுப்பள்ளிக்கு கழிவறை, பூங்கா அமைத்துக்கொடுத்த தனியார் நிறுவனம்..!

X
திறப்பு

திறப்பு விழா

Kanchipuram District | காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், சிறுவஞ்சூரில் உள்ள அரசுப்பள்ளிக்கு கழிவறை மற்றும் குழந்தைகள் பூங்காவை தனியார் நிறுனம் அமைத்துக்கொடுத்துள்ளது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில உள்ள சிறுவஞ்சூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு கழிவறை மற்றும் குழந்தைகள் பூங்கா  ஆகியவற்றை தனியார் நிறுவனம் அமைத்து கொடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நாட்டரசன் பட்டு ஊராட்சியில் சிறுவஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 200 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த பள்ளிக்கு கழிவறை வசதி மற்றும் குழந்தைகள் பூங்கா அமைத்து தர வேண்டும் என்று GKN Automotive என்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சாம்பசிவம் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் படிக்க :   பழனி கோவிலில் 281 காலி பணியிடங்கள்.. மாத சம்பளம் ரூ.1,13,500 வரை வாங்கலாம் - முழு விவரம் இதோ..!

இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் (Corporate Social Responsibility) இருந்து 28.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக கழிவறை வசதி மற்றும் குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டன.

கழிப்பறை கட்டிடம்

இதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சாம்பசிவம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் வினோத் அப்புநிர்மல் மற்றும் மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் ரவி கலந்துகொண்டு குழந்தைகள் பூங்கா மற்றும் கழிவறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மேலும் படிக்க :   மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தங்கள் கிராமத்தில் இதுவரை இல்லாத மருத்துவமனை வசதி, உயர்நிலை பள்ளி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறு நாடகம் மூலம் நடித்து காட்டி அசத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்வு தனியார் நிறுவன, தொன்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News