முகப்பு /காஞ்சிபுரம் /

பங்குனி மாத அமாவாசை.. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வீதியுலா உற்சவம்!

பங்குனி மாத அமாவாசை.. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வீதியுலா உற்சவம்!

X
சிறப்பு

சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 

Kanchipuram District | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி வெண்பட்டு உடுத்தி பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி, பூதேவி உடன் வீதி உலாவந்தார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி வெண்பட்டு உடுத்தி பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி,பூதேவி உடன் வீதி உலாவந்தார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, அரக்கு, மஞ்சள் நிறகறை உள்ள வெண்பட்டாடை உடுத்தி, திருவாபரணங்கள், குருவி வேர், மல்லிகை பூ, மகிழம்பூ மலர் மாலைகள் சூடி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதர் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி எனும் அனுமன் கோவிலில் எழுந்தருளி சேவை சாதித்தார். பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பிய வரதராஜப் பெருமாளுக்கு கட தீப ஆர்த்தி காட்டியதை தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளினார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Festival, Kanchipuram, Local News