முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை  படைத்த இளைஞர்..! எப்படிப்பா?

காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை  படைத்த இளைஞர்..! எப்படிப்பா?

X
சாதனை

சாதனை படைத்த இளைஞர்

Kanchipuram guiness record | காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள திருவேங்கம்பன் தெரு பகுதியை சேர்ந்த இளவரசன் டைப்பிங்கில் 11 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் உள்ள திருவேங்கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவர் மும்பை தனியார் பெயிண்ட் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கின்னஸ் சாதனைகளை செய்து வருகிறார்.

முதுகலை பட்டதாரியான இவர் தற்பொழுது வரை 11 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதுவரை மேற்கொண்ட சாதனைகள் குறித்து இளவரசன் கூறுகையில் பொதுவாக டைப்பிங் என்றால் கணினி முன்பு உட்கார்ந்து டைப்பிங் அடிப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால் இவர் கணினியை முதுகிற்கு பின்னால் வைத்துக் கொண்டு கைகளை இரண்டையும் கணினி மீது வைத்து வித்தியாசமான முறையில் டைப்பிங் செய்து அதில் நான்கு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் அதே போல தனது சுண்டு விரல்களை பயன்படுத்தி A முதல் Z வரை மிக விரைவாக அதாவது நொடிப்பொழுதில் டைப் செய்து அதில் ஒரு கின்னஸ் சாதனையும் மேலும் கிரிக்கெட்டுக்கு பயன்படுத்தும் கையுறைகளை பயன்படுத்தி A முதல் Z வரை டைப்பிங் செய்து ஒரு கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.

பின்னர் தன் கண்களை கட்டிக்கொண்டு Z முதல் A வரையும் டைப் செய்தும், மொபைலில் ஒரே ஒரு விரலை பயன்படுத்தி A முதல் Z வரையும் Z முதல் A வரையும் டைப் செய்தும், தன் கைகளை பயன்படுத்தி டேபிள் டென்னிஸ் பந்துகளை அதாவது 14 பந்துகளை தலை குப்புற பிடித்து அதில் கின்னஸ் சாதனை என இவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தமாக 11 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.

மேலும் இந்தியாவில் ஒரு தனி நபர் 23 கின்னஸ் சாதனைகளை படைத்தது தான் இன்று வரை முதன்மையானதாக உள்ளது என்றும் அதை தான் முறியடித்து முதல் ஆளாக வரவேண்டும் என்பது தான் இவரின் நோக்கம் என்று தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம் என்று தெரிவித்தார். கொரோனா லாக்டவுனில் தான் தன் முயற்சிகளை முதலில் தொடங்கியது என்று மேலும் தெரிவித்தார்.

First published:

Tags: Kanchipuram, Local News, Record