முகப்பு /காஞ்சிபுரம் /

"குழந்தைகள் கையில் போன் இருப்பது ஆபத்தானது" காஞ்சிபுரம் மேயர் அறிவுரை!

"குழந்தைகள் கையில் போன் இருப்பது ஆபத்தானது" காஞ்சிபுரம் மேயர் அறிவுரை!

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் மேயர் 

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் மேயர் 

Kanchipuram news | காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை நடுநிலைப்பள்ளியின் 127ஆவது ஆண்டு விழாவில் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட யாகசாலை நடுநிலைப்பள்ளியின் 127ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வெ.பிரமிளாகுமாரி தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், மாநகராட்சியின் பணிக்குழு உறுப்பினா் சுரேஷ் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி ஆகியோா் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினா்.

விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் பேசுகையில், மாணவா்கள் கைப்பேசி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. எனவே அதனை கவனமான முறையில் கையாள வேண்டும். இது பெற்றோருக்கும் பொருந்தும். முக்கியமாக மாணவா்களோடு பழகும் நண்பா்கள் எப்படிப்பட்டவா்களாக இருக்கிறாா்கள் என்பதையும் பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News