முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் | வீரப்பராஜம்பேட்டை வேதநாதஈஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்- திரண்ட மக்கள்

காஞ்சிபுரம் | வீரப்பராஜம்பேட்டை வேதநாதஈஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்- திரண்ட மக்கள்

கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

Kanchipuram | காஞ்சிபுரம் மாவட்டம் திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம்பேட்டையில் உள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதநாத ஈஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம்பேட்டையில் உள்ள வேதநாயகி அம்பிகை சமேத வேதநாத ஈஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம் பேட்டையில் அமைந்துள்ளது வேதநாதஈஸ்வரர் திருக்கோயில்.

திருமணத் தடைகளை நீக்கும் மிகப்பழமையான இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின.

மறுநாள் சோமகும்ப பூஜையும்,3 ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இந்நிலையில்யாகசாலையிலிருந்து கே.குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர்க் குடங்கள் அனைத்தும்கோபுரங்களுக்குஎடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும், அலஙகார தீபாராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரருக்கு மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவில் புஷ்பத்தேரில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

காஞ்சிபுரம் கருப்படிதட்டடை ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம்..

சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினரும்,வீரப்பராஜம்பேட்டை கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News