ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் பாலாற்றில் வரதராஜசுவாமி வனபோஜன உற்சவம்..!

காஞ்சிபுரம் பாலாற்றில் வரதராஜசுவாமி வனபோஜன உற்சவம்..!

பாலாற்றில் சிறப்புத் திருமஞ்சனம் கண்டருளிய உற்சவர் தேவராஜசுவாமி 

பாலாற்றில் சிறப்புத் திருமஞ்சனம் கண்டருளிய உற்சவர் தேவராஜசுவாமி 

Kanchipuram varadharaja perumal temple | காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலிலிருந்து உற்சவர் தேவராஜசுவாமி பாலாற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

வன போஜன உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி களக்காட்டூர் சென்று பின்னர் பாலாற்றுக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஆண்டு தோறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலிலிருந்து உற்சவர் தேவராஜசுவாமி களக்காட்டூர் கரிய மாணிக்கப் பெருமாள் ஆலயத்துக்கு எழுந்தருளி பின்னர் அங்கிருந்து அக்கிராமத்தில் வீதியுலாவாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் பாலாற்றில் எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று ஆலயத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வனபோஜன உற்சவம் எனப்படுகிறது.

இந்த ஆண்டு வனபோஜன உற்சவத்தையொட்டி பெருமாள் ஆலயத்திலிருந்து ஓரிக்கை,சின்ன ஐயங்கார்குளம் மண்டகப்படிகளில் சேவை சாதித்து பின்னர் களக்காட்டூர் சென்றார்.அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.இதனைத் தொடர்ந்து பெருமாள் களக்காட்டூர் கிராமத்தில் உள்ள வீதிகளில் வீதியுலாவாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் களக்காட்டூரிலிருந்து ஓரிக்கை பகுதியில் பாலாற்றுக்கு எழுந்தருளி அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தங்கினார்.அங்கு சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடந்தன.இந்நிகழ்வின் போது கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,தாதாசாரியார் வகையறாக்களை சேர்ந்த லட்சுமி குமாரன்,சுதர்சன்,கோபாலகிருஷ்ணன்,வாசு மற்றும் முகுந்தன் ஆகியோர் உட்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்புத் தீபாராதனைகளுக்குப் பிறகு பெருமாள் பாலாற்றிலிருந்து புறப்பட்டு தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு மாலை மரியாதை சாற்றுமுறைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.ஏற்பாடுகளை கோயில் மணியக்காரர் கிருஷ்ணன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Temple