ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற வீதி உலா..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற வீதி உலா..!

X
சிறப்பு

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் 

Kanchipuram Varadharaja Perumal Temple | 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாதம் அமாவாசையை ஒட்டி  திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

தை அமாவாசையையொட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் வெண்பட்டாடை உடுத்தி பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி, பூதேவி உடன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாதம் அமாவாசையை ஒட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலை மீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, வெண்பட்டாடை உடுத்தி, திருவாபரணங்கள், பஞ்சவர்ண பூ மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருவடி கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Temple