முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

X
உண்டியல்

உண்டியல் எண்ணும் பணி 

Kanchipuram news | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள கோவில் உண்டியலில் பணம், நகை, வெள்ளி பொருட்கள், முதலியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இதையும் படிங்க | காஞ்சிபுரம் விவசாயிகளா? அப்போ ஆட்சியர் சொன்ன அறிவிப்ப உடனே செய்யுங்க!

அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் 5 உண்டியல்கள் நிரம்பியதை தொடர்ந்து, உண்டியல்களை திறந்து என்னும் பணி 4 மாதங்களுக்கு பிறகு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்களும் என 120 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி பக்தர்கள் காணிக்கையாக 65 லட்சத்து 64 ஆயிரத்து 158 ரூபாய் ரொக்க பணமும், 211.3 கிராம் தங்க நகைகளும், 450.6 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பக்தர்களிடம் காணிக்கையாக செலுத்திய பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News