முகப்பு /காஞ்சிபுரம் /

தமிழ் புத்தாண்டு.. மாடவீதிகளில் வீதி உலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்!

தமிழ் புத்தாண்டு.. மாடவீதிகளில் வீதி உலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

Kanchipuram festival | தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வந்த காஞ்சி வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசித்தனர்.

  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காஞ்சி வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். அவரை திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசித்தனர்.

தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாட வீதி புறப்பாடு வீதி உலா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாட வீதி புறப்பாடு உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க செய்தனர்.

top videos

    இதனைத் தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டிகள் பாடி வர, ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு சன்னதி வீதி மற்றும் மாட வீதிகளில் வீதி உலா வந்தார். மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி கொடுத்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News, Tamil New Year