முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு.. சிறப்புகள் என்ன?

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு.. சிறப்புகள் என்ன?

X
இரட்டை

இரட்டை புறப்பாடு உற்சவம் 

Kanchipuram News : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழ் புத்தாண்டு சோப கிருது ஆண்டின் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி உலக பிரசித்தி பெற்றதும், 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டைப் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

இரட்டைப் புறப்பாடு உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்து வைர, வைடூரிய, நவரத்தின, திருவாபரணங்கள் அணிவித்து, செண்பகப் பூ, மனோரஞ்சித பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் சூட்டி கண்ணாடி மாளிகையில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேள, தாள நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க, மூன்று குடைகளின் கீழ் ஸ்ரீதேவி பூதேவி பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள், கோவில் பிரகாரத்தில் உள்ள ஆழ்வார்களுக்கு காட்சியளித்தவாறு உள் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

இதையும் படிங்க : "ஆயிரங்களில் முதலீடு அசத்தல் லாபம்" அஞ்சலகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம் அறிவிப்பு!

இந்த உள் புறப்பாடு உற்சவம் முடிந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாளுக்கும்,பெருந்தேவி தாயாருக்கும் கும்ப ஆரத்தி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். இந்த சித்திரை முதல் வெள்ளிக்கிழமை ஒட்டி நடைபெற்ற இரட்டைப் படைப்பாடு உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    வரதராஜ பெருமாளும், அன்னை பெருந்தேவி தாயாரும் ஒன்றாக இணைந்து இருவரும் புறப்பட்டு வருவதை இரட்டை புறப்பாடு உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இருவரையும் கண்டு தரிசிப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் எனப்து பக்தர்களின் நம்பிக்கை.

    First published:

    Tags: Kanchipuram, Local News