கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில் 88-வது திவ்ய தேசமாக கோவில் கொண்டு எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாளுக்கு ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி சுபகிருது ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள், மலர் மாலைகள், அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர் முன் செல்ல திருப்புட்குழி, பாலுசெட்டிச்சத்திரம் வீதிகளில் தங்க கருட வாகனத்தில் விஜயராகவப் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கருட சேவை உற்சவத்தில் ஏராளமான பஜனை கோஷ்டிகள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை மனம் உருக பாடியபடி சென்றனர்.
வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு கோவிந்தா கோஷமிட்டவாறு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
வழி நெடுகிலும் கருட சேவை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரிக்காக 20,000 லட்டுகள் தயாரிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News