காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகௌசிகேசுவரர் கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.
மன்னன் உத்தம சோழனால் கடந்த 9ஆம் நூற்றாண்டில் கோபுரம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட சிறப்புக்குரியது காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகௌசிகேசுவரர் ஆலயம். காமாட்சி அம்மன் கோயில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 1990 ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாலும்,2009 ஆம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளாலும் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னர் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியின்படி இந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.
பாலாலய பூஜைகள் கோ.தர்மலிங்க சிவாச்சாரியார் தலைமையில் ஆ.பிரதாப் சிவாச்சாரியார் முன்னிலையில் நடைபெற்றன. மகா கும்பாபிஷேக திருப்பணிகளை சென்னை மகாலட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பாலாலயத்தை முன்னிட்டு ஸ்ரீ கௌசிகேசுவரருக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. நிகழ்வில் மகாலட்சுமி சுப்பிரமணியம், சி.என்.ராமச்சந்திர சாஸ்திரிகள், ஆடிட்டர் ஜெ.சந்திரமௌலி, ரா.மகேஷ் சிவாச்சாரியார், த.தினேஷ் சிவம் உட்பட பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News, Temple