முகப்பு /காஞ்சிபுரம் /

முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய காஞ்சி பள்ளி மாணவர்கள்

முதல்வருக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய காஞ்சி பள்ளி மாணவர்கள்

X
வாழ்த்து

வாழ்த்து கூறும் மாணவர்கள்

Kanchipuram MK Stalin Birthday | காஞ்சிபுரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் வித்தியாசமான முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்திற்கு வண்ணம் தீட்டி 70 என்ற எண் வடிவில் 70 மாணவர்கள் நின்று பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தனர்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின்  பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை தி.மு.கவினர் பலவகைகளிலும் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். சென்னையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலினின் படத்திற்கு வண்ணம் தீட்டி 70 என்ற எண் வடிவில் நின்று 70 மாணவர்கள் ஓரே நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கையில் வீணையுடன், தங்க ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி!

மேலும், பள்ளி மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என 70 மாணவர்களும் ஒரே நேரத்தில் தெரிவித்து அசத்தினர்.

First published:

Tags: Kanchipuram, Local News