ஹோம் /காஞ்சிபுரம் /

பொங்கல் பண்டிகை ஒட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் விற்பனைக்கு குவிந்த காய்கறிகள்

பொங்கல் பண்டிகை ஒட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் விற்பனைக்கு குவிந்த காய்கறிகள்

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை 

Kanchipuram Market Crowd | பொங்கல் பண்டிகைக்கு தேவையான காய்கறிகளை வாங்க பொதுமக்கள் காலை முதலே கூட்டம் கூட்டமாக அலை மோதி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

பொங்கல் பண்டிகை ஒட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் வழக்கத்தை இட பொதுமக்களின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. தைப்பொங்கல் திருநாளில் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி வைத்து, புது பானையில் பச்சரிசி,பால், முந்திரி, திராட்சை, வெல்லம், கலந்து பொங்கல் செய்து,பூமிக்கு கீழே விளைந்த காய்கறி கிழங்கு வகைகளை சமைத்து வைத்து சூரிய பகவானுக்கு படையில் இட்டு இயற்கையை வணங்கி மகிழ்வது தமிழர்கள் மரபு.இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான காய்கறி வகைகள் காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஏராளமாக கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொங்கல் பண்டிகையின் படையலுக்கு தேவையான கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, புடி கருணை , சர்க்கரை வள்ளி கிழங்கு,ஆல் வள்ளிக்கிழங்கு,வெற்றிலை வள்ளி கிழங்கு, முள்ளங்கி, மொச்சை, காராமணி, துவரை, பரங்கிக்காய், வாழைக்காய், உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் கொண்டு விற்பனை செய்ய வியாபாரிகள் காத்திருக்கின்றனர். மேலும் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, வகைகளும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு சிறு வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் வாங்கிச் செல்லும் வகையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News, Pongal 2023