முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் புரிசை கிராமத்தில் களைகட்டிய ஸ்ரீகன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!

காஞ்சிபுரம் புரிசை கிராமத்தில் களைகட்டிய ஸ்ரீகன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!

X
ஸ்ரீகன்னியம்மன்

ஸ்ரீகன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Kanchipuram News | காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமத்தில், கிராம தேவதையான ஸ்ரீகன்னியம்மன்  திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமத்தில் ஸ்ரீகன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. புரிசை கிராமத்தினரின் கிராம தேவதையான ஸ்ரீகன்னியம்மனை கோவிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை ராஜ கோபுரத்திற்கு எடுத்து சென்று,வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசை மற்றும் மேளதாளங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மேல் இருந்த கோபுர கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மீது கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் புரிசை கிராமத்தை சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஸ்ரீகன்னியம்மனை வழிப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் கோவில் விழா குழுவினரின் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News