முகப்பு /காஞ்சிபுரம் /

திருவண்ணாமலை‌ ஏடிஎம் கொள்ளை எதிரொலி.. காஞ்சியில் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை!

திருவண்ணாமலை‌ ஏடிஎம் கொள்ளை எதிரொலி.. காஞ்சியில் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை!

காஞ்சிபுரம் எஸ்.பி.ஆலோசனை

காஞ்சிபுரம் எஸ்.பி.ஆலோசனை

Kanchipuram Discussion | திருவண்ணாமலையில் அடுத்தடுத்த 4 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி அரங்கேறியதால் இனியும் இப்படி நடக்காமல் தடுக்க காஞ்சி வங்கி மேலாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

திருவண்ணாமலை‌ ATM கொள்ளை எதிரொலியால் காஞ்சிபுரத்தில் வங்கி மேலாளர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் ஆலோசனை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 ஆம் தேதி ஒரே இரவில் நான்கு இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து அதிலிருந்த ரூ 75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,தலைமையில் வங்கி மேலாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வங்கி ஏ.டி.எம் பாதுகாப்புக் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌.

இக்கூட்டத்தில் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பாதுகாப்பு காவலர்களை நியமித்தல், பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவுதல், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் இயத்திரத்தை உடைக்கும் பட்சத்தில் வங்கியில் மட்டும் அலாரம் ஒலி எழுப்புவது மட்டுமில்லாமல் அருகில் உள்ள காவல்நிலையத்திலும் அலாரம் ஒலி எழுப்ப வழிவகை செய்தல், காவல்துறையினரின் தொடர்பு எண்னை தெரிந்துவைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வங்கி மேலாளர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வினோத் சாந்தாராம்,சந்திரசேகர்,பாலகுமார்‌ மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஜூலியஸ் சீசர் மற்றும் சுனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: ATM, Kanchipuram, Local News, Theft, Tiruvannamalai