காஞ்சிபுரத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளுடன் கலந்துரையாடினார்.
கிராமப்புற ஊராட்சிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பணியாற்றும் போலீசாருக்கு ஊராட்சி மன்ற தலைவர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் குற்றவாளிகள் குறித்தும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்தும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என உறுதி அளித்தார். கிராமங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்றும் மாணவர்களையும் இளைய சமுதாயத்தினரையும் சீரழிக்கும் போதைப் பொருளான கஞ்சா விற்பனையை ஒழிக்க போலீசாருக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருந்து தகவல்களை அளித்தால் வருங்கால சந்ததியினரை கஞ்சா போதை எனும் நோயிலிருந்து காக்க முடியும் என கேட்டுக்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎஸ்பி க்கள் சந்திரசேகர்,பாலகுமார்,டிஎஸ்பி ஜூலியஸ் சீசர்,காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 56 கிராம ஊராட்சி மன்றங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News, Police