முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 64வது ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்பு..

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 64வது ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்பு..

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன்

kanchipuram Collector kalaiselvi mohan | காஞ்சிபுரம் மாவட்டத்தின் 64வது ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 64வது ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு தலைமை செயலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இதற்கு முன்‌ காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஆர்த்தி கடந்த 16ம் தேதி அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு, நில அளவை துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன்

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 64வது மாவட்ட ஆட்சியராக நேற்று (25.05.2023) பொறுப்பேற்று அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், “அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை சம அளவில் சென்றடைய பாடுபடுவேன்” என தெரிவித்தார். மேலும் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கலைச்செல்வி மோகனுக்கு மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News