முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலில் படுஜோராக நடந்த திருக்கல்யாண வைபவம்!

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலில் படுஜோராக நடந்த திருக்கல்யாண வைபவம்!

X
திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

Kanchipuram Muktheeswarar Temple | 63 நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற ஸ்தலமான காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

63 நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு மூலவர் முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து,உற்சவர் சந்திரசேகரர் சிவ பெருமானுக்கும் மனோன்மணி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மல்லிகைப் பூ ,ரோஜா பூ, மனோரஞ்சிதப் பூ மாலைகள் அணிவித்து,சிறப்பு அலங்காரத்தில் மணமக்களாக மாறி கோவில் மண்டபத்தில் எழுந்தருளினர்.

ALSO READ | பாம்பை கடித்து துப்பி வீடியோ பதிவிட்ட இளைஞர்கள்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

top videos

    பின்னர் பிரம்ம முகூர்த்த நேரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோவில் அர்ச்சகர்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய, மனோன்மணி அம்மையாருக்கும் சந்திரசேகரர் சிவபெருமானுக்கும் மாலை மாற்றி அணிவித்து கொண்டு, மாங்கல்யத்தை கட்டும் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News