முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்- ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

காஞ்சி கோவில் விழா

காஞ்சி கோவில் விழா

kanchipuram | காஞ்சிபுரம் மாவட்டம் கூரத்தாழ்வார் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் அமைந்துள்ள கூரத்தாழ்வார் கோயிலில் உற்சவர் கூரத்தாழ்வார் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள கூரத்தாழ்வார் சந்நிதியில் ஆண்டு தோறும் தை மாதம் கூரத்தாழ்வார் திருஅவதார மகோத்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. நிகழாண்டு கூரத்தாழ்வாரின் 1013-வது திரு அவதார மகோத்சவம் நிகழ் மாதம் 1-ம் தேதி தொடங்கியது.

இதனையொட்டி காலையில் கூரத்தாழ்வார் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 9-ம் நாள் நிகழ்வாக உற்சவர் கூரத்தாழ்வார் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் கூரம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயில் நிலைக்கு வந்து சேர்ந்தார்.

திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோவில் சிறப்புகள்..

மாலையில் ஹம்ச வாகனத்தில் கூரத்தாழ்வார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

First published:

Tags: Kanchipuram, Local News