முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எவ்வளவு தெரியுமா?

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எவ்வளவு தெரியுமா?

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்

Kanchipuram Kamatchi Amman Temple : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் திறப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

சக்தி ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம் மற்றும் தங்கம்,வெள்ளி, பொருட்களை காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வார்கள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காணிக்கைகளை எண்ணும் பணி 75 நாட்களுக்கு பிறகு இன்று கோவிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, செயல் அலுவலர்கள் தியாகராஜன்,  சுரேஷ், கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாயும் 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் உண்டியல் வசூலாக கிடைத்துள்ளது. உண்டியல் வசூலில் கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News