முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்  திறப்பு.. காணிக்கை தொகை எவ்வளவு தெரியுமா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்  திறப்பு.. காணிக்கை தொகை எவ்வளவு தெரியுமா?

X
உண்டியல்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Kanchipuram kamatchi amman | காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை எண்ணப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த 2 உண்டியல்கள் 55 நாட்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ரூ.60,58,345 இருந்தன.

இதில் மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் 55 நாட்களுக்குப் பிறகு கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.கோயில் நவராத்திரி மண்டபத்தில் திறந்து எண்ணப்பட்ட போது அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கார்த்திகேயன்,அமுதா,ஆய்வாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் கோபிகா ரெத்னம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து உண்டியல் தொகையை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ரொக்கமாக ரூ.60,58,345, 321.04 கிராம் தங்கம், 557.830 கிராம் வெள்ளி ஆகியன இருந்தது. இது தவிர சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, மலேசியா, கத்தார், குவைத், கொரியா, ஆகிய வெளிநாட்டு பணத்தாள்களும் இருந்தன என்பது குறிபிடதக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News