முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.. பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் உற்சவம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.. பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் உற்சவம்!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

Kanchipuram Ekambaranathar Temple | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, வெள்ளி பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் விழாவை முன்னிட்டு, முழு முதல் கடவுளான விநாயகர் பெருமான் வெள்ளிப் பெருச்சாளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்திவி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம்  ஏலவார் குழலி அம்மை உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில், சுபகிருது ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா வை முன்னிட்டு முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை வேண்டி வணங்கும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

விநாயகர் உற்சவத்தை முன்னிட்டு, விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மல்லிகைப்பூ, ரோஜா பூ, கனகாம்பரம் பூ உள்ளிட்ட மலர்மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து, வெள்ளிப் பெருச்சாளி வாகனத்தில் எழுந்தருளச் செய்து, பச்சை வண்ண குடை பிடிக்க காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு வெள்ளிப் பெருச்சாளி வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகப் பெருமானை திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News