ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவிலில் பாரிவேட்டை உற்சவம்..

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவிலில் பாரிவேட்டை உற்சவம்..

X
ஏகாம்பரநாதர்,ஏலவார்

ஏகாம்பரநாதர்,ஏலவார் குழலி அம்மன்,ஆல் மேல் பல்லக்கில் செல்லும் காட்சி 

Kanchipuram Ekamparanathar Elavar Kuzhali Amman Temple | காணும் பொங்கலை முன்னிட்டு ஏலவார்க் குழலி ஏகாம்பரநாதர் சுவாமி திம்ம சமுத்திரம் பாரிவேட்டை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அருகே திம்ம சமுத்திரம் கிராமத்தில்ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மன் பாரிவேட்டை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

3000 ஆண்டுகள் பழமையான பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்திவி எனும் ஸ்தலமாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் என்று திம்ம சமுத்திரம் பாரிவேட்டை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பாரிவேட்டை உற்சவம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு காணும் பொங்கலை முன்னிட்டு ஏலவார்க் குழலி ஏகாம்பரநாதர் சுவாமி திம்ம சமுத்திரம் பாரிவேட்டை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திம்ம சமுத்திரம் பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து ஏகாம்பரநாதர்,ஏலவார் குழலி அம்மன்,ஆல் மேல் பல்லக்கில் கோவிலில் இருந்துதிம்ம சமுத்திரம் கிராமத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மன் பாரிவேட்டை உற்சவத்திற்காக செல்லும் வழிநெடுகிலும் மாக்கோலங்கள் போடப்பட்டு,சிவ கண வாத்தியங்கள், பறை இசை பேண்ட் வாத்தியங்கள் பம்பை உடுக்கை, மேள,தாளம் என ஏராளமான பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க, புலியாட்டம், மயிலாட்டம், கட்டைக்கூத்து கலைஞர்கள் ஆடிவர அலங்கரிக்கப்பட்ட ஆள் மேல் பல்லக்கில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மன் திம்ம சமுத்திரம் பாரிவேட்டை உற்சவம் கண்டு அருள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன் செல்ல ஊர்வலமாக சென்றார்.

First published:

Tags: Kancheepuram, Kanchipuram, Local News