ஹோம் /காஞ்சிபுரம் /

மது பிரியர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

மது பிரியர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடை

Tasmac Shop Closed : காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மூடப்படும் தேதி குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவள்ளூவர் தினம் 16.01.2023 மற்றும் குடியரசு தினம் 26.01.2023 அன்று மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டு என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் வரும் 16.01.2023 (திங்கள் கிழமை)-திருவள்ளூவர் தினம் மற்றும் 26.01.2023 (வியாழன்கிழமை)-குடியரசு தினம் ஆகிய நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 ,FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kanchipuram, Local News